The Indian Times

TITLE WINNER-ஐ அறிவிக்கும் வெங்கடேஷ் பட்… பயத்தில் உறைந்த COOKகள்…| COOK WITH COMALI FINALE

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நிகழ்ச்சியில் தற்போது இறுதி போட்டியாளர்களாக அம்மு அபிராமி, தர்ஷன், ஸ்ருத்திகா, வித்யூலேகா,சந்தோஷ்,கிரேஸ் கருணாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இதில் யார் இறுதி போட்டியில் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் பெரிதும் கிளம்பியுள்ளது.இந்த வாரம் நடைபெறும் இந்த இறுதி நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு மக்களிடம் கிளம்பியுள்ளது.இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோவில் போட்டியாளர்கள் கடுமையாக சமைப்பதை காணலாம் அதேபோல் விளையாட்டு தனம் ஒருபக்கம் இருந்தாலும் முடிந்தவரை கோமாளிகளும் அவர்களுடன் இணைந்து கூகுளை வெற்றிபெற வைக்க தங்களது உழைப்பினை கொடுத்துள்ளனர்.

நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் அனைத்து கோமாளிகளும் சமைத்து முடித்து,முடிவுக்காக காத்து இருக்கின்றனர்.செஃப் வெங்கடேஷ் பட் நேரிடையாக கூறிவிடுகிறேன் என குக் வித் கோமாளி சீசன் 3 ல் வெற்றிபெற்ற பெயரினை சொல்ல வருகிறார்.போட்டியாளர்கள் முகத்தில் பெரும் பீதியை காண முடிகிறது.இந்த ப்ரோமோ அவர்களுக்கு மட்டும் இல்லை,நமக்கும் யாரு வெற்றிபெறுவார் என்று எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியினை ரொம்ப மிஸ் பண்ணுவோம் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் மேலும் சீசன் 4 வேகமாக தொடங்க கோரிக்கையும் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : VIJAY TELEVISION 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in