The Indian Times

ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 பட ட்ரைலர் வெளியாகியது

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி ,மாபெரும் வரவேற்பினை பெற்ற படம் சந்திரமுகி.இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார்.மேலும் இவர்களுடன் பிரபு,ஜோதிகா,நாசர் வடிவேலு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.வித்யாசாகர் இசையில் உருவாகி இருந்த இப்படம் பெரும் வரவேற்பினை மக்களிடம் பெற்று அசத்தியது.பல நாட்கள் ஓடி சாதனையும் படைத்தது சந்திரமுகி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இன்றுவரை இப்படத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இன்று வரை இப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் அதனை காண்பதற்கு ஒரு கூட்டமே உள்ளது.சில மாதங்களுக்கு முன்பு சந்திரமுகி 2 ஆம் பாகம் உருவாக இருப்பதாக நடிகர் லாரன்ஸ் பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.இப்படத்தில் இந்த முறை நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்காமல் லாரன்ஸ் அவரது ஆசியுடன் நடிக்க இருப்பதாக அறிவித்திருந்தார்

Advertisement

இந்நிலையில் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது.இப்படத்தில் சந்திரமுகியாக கங்கனா நடிக்கிறார்.மேலும் இவர்களுடன் ஸ்ருஷ்டி,லட்சுமி மேனன் ,ராதிகா மற்றும் வடிவேலு என பெரும் நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்.தற்போது இப்படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாக உள்ள நிலையில்,படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது,ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in