The Indian Times

தியேட்டர்ல பாக்குற அளவுக்கு WORTH இல்லை…நயன்தாரா நடிக்கும் கனெக்ட் PUBLIC REVIEW

சரத்குமார் நடிப்பில் வெளியாகிய ஐயா படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.ரசிகர்கள் முதல் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வரை யார் இந்த பெண் என கேட்கவைத்தார் நயன்தாரா.தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.தற்போது இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து இந்த வரிசையில் தற்போது நயன்தாரா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் கனெக்ட் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருடன் அனுபம் கீர்,சத்யராஜ்,வவினய் ஆகியோர் நடித்துள்ளனர்.நயன்தாராவே இப்படத்தினை தயாரித்தும் உள்ளார்.90 நிமிட கதையாக உருவாகியுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Advertisement

ரசிகர்கள் ஆர்வமாக படத்தினை கண்டு களித்து வருகின்றனர்,வெளிவரும் ரசிகர்கள் கூறுவதாவது,படம் நல்லா இருக்கு,ஆனா தியேட்டர்ல பார்க்குற அளவுக்கு ஓடிடில ரிலீஸ் பண்ணிருக்கலாம்.இசை நல்லா இருக்கு ஆனா கதையில கொஞ்சம் இழுவை இருக்கு,இடைவேளை இருந்தால் இன்னும் அதிகமாக இழுத்திருக்கும் படம்.பின்னணி இசைக்காக பார்க்கலாம்,நயன்தாரா நடிப்பு நல்லா இருக்கு என கூறி தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Embed video credits : Shruti tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in