The Indian Times

வாரிசு இசைவெளியீட்டு விழாவுக்கு வந்த சிக்கல்… சொன்னபடி நடக்குமா இசைவெளியீட்டு விழா?

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் அவரை நேசித்து வருகின்றனர்.பல போராட்டங்கள் விமர்சனங்களை சந்தித்து எதிலும் விட்டுக்கொடுக்காமல் பின்வாங்காமல் தொடர்ந்து போராடி இன்று இவ்வளவு பெரிய இடத்தினை அடைந்துள்ளார்.

Advertisement

அண்மையில் சன் பிக்சர் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி நடிப்பில் உருவாகிய பீஸ்ட் படம் எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.இதனால் தனது அடுத்த படத்தில் உஷாராக நடித்து வருகிறார் விஜய்.இவரின் 66வது படத்தினை தோழா படத்தினை இயக்கிய வம்சி இயக்கி வருகிறார்.வாரிசு என இப்படத்திர்ற்கு படக்குழு பெயரிட்டுள்ளது.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.அண்மையில் இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Advertisement

இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா டிசம்பர் 24 ஆம் தேதி மாலை சென்னையில் நடைபெற இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.இந்நிலையில் அடங்கிப்போன கொரோனா பாதிப்பின் புதிய வகை சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது.மேலும் அந்த பாதிப்பு இந்தியாவிலும் பரவி தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.இதனால் இன்று அரசு ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது.இந்த கூட்டத்தில் மக்கள் முகக்கவசம் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த சூழ்நிலையில் இசை வெளியீட்டு விழா நடத்தினால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்,என்பதால் வாரிசு இசைவெளியீட்டு விழா நடக்குமா என ரசிகர்களிடம் கேள்வி எழும்பியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in