The Indian Times

ஆராரிரோ கேட்குதம்மா..நேரில் நீ வந்தது என் நிஜமா…வாரிசு படத்தின் “அம்மா” பாடல் வெளியாகியது

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் ஒருவர்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தமிழில் மட்டும் இல்லாமல் கேரளா தெலுங்கு போன்ற சினிமாக்களிலும் இவருக்கு பெரும் வரவேற்பும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.இதுவே தளபதி விஜயின் பலம் ஆகும்.இதற்காகவே தளபதி வைத்து இயக்க பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் விஜய் வீட்டு வாசலில் காத்துக்கிடக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கபட்டுள்ளது

Advertisement

விஜய் தற்போது தெலுங்கிலும் கால் தடம் பதிக்க உள்ளார்.இயக்குனர் வம்சி இயக்கத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் நேரிடையாக வெளியாக உள்ளது.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.பொங்கலுக்கு இப்படம் வெளியாக உள்ளது.இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கிடக்கின்றனர்.

Advertisement

இப்படத்தில் தமன் இசையில் இரண்டு பாடல்கள் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்துள்ளது.அதனை தொடர்ந்து வாரிசு படத்தின் மூன்றாவது பாடலான அம்மா செண்டிமெண்ட் அடங்கிய பாடலை இன்று மாலை படக்குழு வெளியிட்டுள்ளது.சித்ரா இப்பாடலை பாடியுள்ளார்.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பிணை பெற்று பலரின் அம்மாக்களை நியாபக படுத்துவதாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் மேலும் இப்பாடல் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் சிறந்த பாடல் எனவும் ரசிகர்கள் தங்களது ஆதரவினை பாட்டுக்கு தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : T series

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in