The Indian Times

படத்துல ஆயிரம் பேரை HULK மாதிரி அடிக்கிறாரு விஷால்… லத்தி BLUESATTAI மாறன் REVIEW

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகியவர் நடிகர் விஷால்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.முதல் படமே மாபெரும் ஹிட் என்பதால் அடுத்தடுத்து தமிழில் பல படவாய்ப்புகள் விஷாலின் கதவை தட்டியது.இதன்மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார். சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினார்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்துள்ள திரைப்படம் லத்தி.இப்படத்தினை நடிகர் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலரில் வந்த சண்டை காட்சிகள் படத்தின் எதிர்பார்ப்பினை அதிகமாக்கியது.தற்போது இப்படத்தினை BLUESATTAI மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த விமர்சனத்தில் அவர் கூறியதாவது,

Advertisement

மசாலா படத்தை மிஞ்சுற அளவுக்கு டெம்பிளேட் அப்படியே உள்ளது.லாஜிக் பத்தி துளி கூட கவலை படலை.படத்துல அடுத்தடுத்து வருகிற வசனத்தை கூட முன்னாடியே கண்டுபிடிக்கிற மாதிரி படம் இருக்கு.கிளைமாக்ஸ் சண்டையே சுமார் முக்கால் மணி நேரத்திற்கு மேல நடக்கு,படத்துல ஆயிரம் பேரை அசால்ட்டா போட்டு அடிக்கிறாரு,சிட்டிக்கு நடுமத்தியில் இருக்குற பில்டிங்ல இப்படி சண்டை நடக்கு ஊருக்குள்ள ஒரு பையன் கூட என்னனு கேட்டு வரல ,சுத்தமா லாஜிக்கே இல்லை என கூறி விமர்சனம் செய்துள்ளார்

Embed video credits : Tamil talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in