The Indian Times

HOLLYWOOD பேய் படங்களை அடித்து தூக்கிய நயன்தாராவின் “கனெக்ட்” TRAILER இதோ….

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.தற்போது இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து தற்போது நயன்தாரா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் கனெக்ட் படத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இப்படத்தில் இவருடன் நடிகர் சத்யராஜ்,அனுபம் கேர்,வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பிரிதிவி சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் முழுக்க முழுக்க திகில் ஆன பேய் படம் ஆகும்.தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படம் கிறிஸ்துமஸ் முன்னிட்டு 22 ஆம் தேதி வெளியாக உள்ளது.ரசிகர்கள் இப்படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : ROWDY PICTURES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in