COOK WITH COMALI நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டது ரொம்ப அசிங்கமா இருந்துச்சு வெட்கமா இருந்துச்சு..கண்ணீர் விட்டு கதறிய மணிமேகலை

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசனில் களம் இறங்கி அதிலும் வெற்றிபெற்றுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க செய்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

COOK WITH COMALI நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டது ரொம்ப அசிங்கமா இருந்துச்சு வெட்கமா இருந்துச்சு..கண்ணீர் விட்டு கதறிய மணிமேகலை 1

விளம்பரம்

தற்போது இந்த நிகழ்ச்சி முடிவடைந்துள்ளது.இந்த முறை குக் வித் கோமாளி பட்டத்தினை ஸ்ருத்திகா வெற்றிபெற்றுள்ளார்.இது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.மேலும் ரசிகர்கள் ஸ்ருதிகாவை பாராட்டி தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர்.அதன்படி ஆண்டுதோறும் நிகழ்ச்சியில் சிறந்த தலைப்புகளில் குக்குகளுக்கும் கோமாளிகளுக்கும் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.இந்த முறையும் அனைவருக்கும் புது புது தலைப்புகளில் விருதுகள் அளிக்கப்பட்டு பெருமைப்படுத்தியுள்ளனர்.

COOK WITH COMALI நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டது ரொம்ப அசிங்கமா இருந்துச்சு வெட்கமா இருந்துச்சு..கண்ணீர் விட்டு கதறிய மணிமேகலை 2

விளம்பரம்

அதன்படி நிகழ்ச்சியில் பல கெட்டப்புகளை போட்டு வந்து அசத்தியவர் மணிமேகலை.தனது கடின உழைப்பால் இன்று இந்தளவிற்கு உயர்ந்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவருக்கு மூன்றாவது சீசனில் மிரட்டல் நாயகி விருது வழங்கப்பட்டுள்ளது.இதனை வாங்கிய மணிமேகலை கூறியதாவது,நான் இங்க இருக்குறவங்க கிட்ட சும்மா உங்க சமையல் நல்லா வராது என கூறுவேன்,ஆனால் அவர்களுக்கு நல்ல விஷயம் நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஒருவராக தான் நான் உள்ளேன்.என் வாழ்க்கையில் நான் மிக பெரிதாக நினைப்பது ஒன்று என் கணவர் ஹுசைன் மற்றொன்று எனது தன்னம்பிக்கை. எனக்கு தொகுப்பாளர் வேலை மட்டுமே பழக்கம் வேறே எதுவும் எனக்கு வராது,குக் வித் கோமாளி நிகழ்ச்சி முதல் சீசனில் கோமாளியாக வந்தேன்,எல்லாருக்கும் ஒரு திறமை இருந்தது எனக்கு அது இல்லை நான் வெட்கப்பட்டேன்,ரொம்ப அசிங்கமாக இருந்தது,எல்லாரும் இவரை அடுத்த சீசனுக்கு அழைக்காதீர்கள் என கமெண்ட் செய்தனர்,நான் தினமும் வீட்டில் சென்று கணவரிடம் கூறி அழுவேன் என கதறி அழுதுள்ளார்.தற்போது சீசன் இரண்டில் கண்டெண்ட் குயின் அவார்ட் கொடுத்தாங்க,அதுதான் எனக்கு சிறந்த அவார்ட் ஆகும்,தற்போது இந்த விருது கிடைத்துள்ளது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  மலேசிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா சீரியல் நாயகி

விளம்பரம்

EMBED VIDEO CREDITS:VIJAY TELEVISION 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment