The Indian Times

ஆட்டம் பாட்டத்துடன் தொடங்கிய COOK WITH COMALI FINAL…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி, தர்ஷன், ஸ்ருத்திகா, வித்யூலேகா, உள்ளனர் இந்நிலையில் இவர்களுக்கிடையே தற்போது வரை குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இந்நிலையில் இந்த வாரம் வைல்ட் கார்டு போட்டிகள் நடத்தப்பட்டு இதுவரை வெளியேறிய போட்டியாளர்களில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதி போட்டியில் கலந்துகொள்ள வைக்கப்பட உள்ளார்கள்.இறுதி போட்டிக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது.அடுத்தவாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இந்த போட்டிகள் ஒளிபரப்பாக உள்ளது.மக்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இருந்தாலும் நிகழ்ச்சி முடியப்போகிறதே என்ற கவலையும் உள்ளது

இறுதி போட்டியின் ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.ஆட்டம் பாட்டம் என கோமாளிகளும் போட்டியாளர்களும் இணைந்து இறுதி போட்டியை ஆரம்பித்துள்ளனர்.இறுதி போட்டி என்ற பரபரப்பு இல்லாமல் வழக்கம் போல் போட்டியாளர்கள் சமைத்துள்ளதை ப்ரோமோவில் காணலாம் இது ஆச்சரியம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.மேலும் இந்த நிகழ்ச்சியில் புகழ் கலந்துகொண்டுள்ளார்.வெளியே சென்ற போட்டியாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்

Embed video credits : Vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in