The Indian Times

CWC முடிஞ்சு அவ்ளோதான் என கலங்கிய KPY KURESHI

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உண்டு.இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த இரண்டு சீசன்கள் நிகழ்ச்சியை போலவே மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது .

Advertisement

இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பல பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் அதில் பலர் வெளியேறிய நிலையில் இறுதி போட்டியாளர்களாக அம்மு அபிராமி,தர்ஷன்,ஸ்ருத்திகா, வித்யூலேகா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.அண்மையில் வைல்ட் கார்ட் சுற்றில் வெளியேறிய போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்,அதில் கிரேஸ் கருணாஸ் மற்றும் சந்தோஷ் ஆகியோர் இறுதி போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கடந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதி போட்டி நடைபெற்றுள்ளது.இதனால் கோமாளிகள் மற்றும் குக்குகள் என அனைவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து தனது நெகிழ்வான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது கோமாளி குரேஷியும் தனது இன்ஸ்டாகிராமில் சோகமாக பதிவிட்டுள்ளார்.அதில் அவர் கூறியதாவது ,இவ்வளவு தூரம் என உங்க அன்பையும் ஆதரவையும் கொடுத்து இருக்கீங்க,ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.ஆரம்பத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அப்போ அப்போ மட்டும் வந்து சென்ற குரேஷி இந்த சீசனில் முழுநேர கோமாளியாக பங்கு பெற்று மக்களை அதிகளவு சிரிக்க வைத்துள்ளார்.இந்த நிகழ்ச்சி முடிவது மக்களுக்கும் பெரும் சோகமாகத்தான் அமைந்துள்ளது.வாரம் முழுவதும் தலையில் வைத்துக்கொள்ளும் அழுத்தத்தினை வார இறுதிகளில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளை பார்த்து தான் இறக்கி வைப்பதாகவும்,தற்போது அந்த நிகழ்ச்சி முடிவது மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாக உள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in