The Indian Times

மகனுடன் சேர்ந்து முதல் பிறந்தநாளை கொண்டாடிய சஞ்சீவ் | ALYA MANASA & SANJIEV

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது இரண்டாவது ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.தற்போது இன்று புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோவும் வழக்கம் போல் அவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இவர்கள் பதிவிடும் வீடியோவிற்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளத்து.இவர்களின் வீடியோவுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுப்பதால் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு ரசிகர்களை இந்த தம்பதியினர் மகிழ்வித்து வருகின்றனர்.அண்மையில் சஞ்சீவின் பிறந்தநாளை கேக் வெட்டி ஆல்யா கொண்டாடியுள்ளார்.மேலும் சஞ்சீவ் தனது மகன் உடன் முதல் பிறந்தநாளை கொண்டாடியதை மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் சஞ்சீவ் ரசிகர்கள் அவருக்கு வீடியோவில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வீடியோவை லைக் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர்

Embed video credits : SANJIEV&ALYA

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in