CWC SHOOTING-ல் தூங்கி இயக்குனரிடம் மாட்டிக்கொண்ட மணிமேகலை…

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிக பிரபலம் ஆகியவர் மணிமேகலை.ஆரம்பத்தில் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார். தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.பல நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார் .ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. அதிர்ச்சியடைந்த விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

CWC SHOOTING-ல் தூங்கி இயக்குனரிடம் மாட்டிக்கொண்ட மணிமேகலை... 1

விளம்பரம்

சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

CWC SHOOTING-ல் தூங்கி இயக்குனரிடம் மாட்டிக்கொண்ட மணிமேகலை... 2

விளம்பரம்

இவர் யூடியூபில் பதிவிடும் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.தனது கணவர் ஹுசைன் உடன் அடிக்கும் லூட்டிகளை வீடியாவாக இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் வெளியிட்டு ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார்.தற்போது இவர் குக் வித் கோமாளி ஷூட்டிங்கில் தூங்கிவிட்டார்,அதனை இயக்குனர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகவே அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு ஷூட்டிங்கில் எப்போ தூங்கினாலும் நான் மட்டுமே மாட்டிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.மணிமேகலை தூங்குவதை பார்க்க நகைச்சுவையாக உள்ளது என்பதால் ரசிகர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

விளம்பரம்

Embed video credits : Indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment