The Indian Times

BEARD OIL விளம்பரத்துல வருகிற மாரி பிரம்மாண்டமாக இருக்கீங்க சார்..புது நடுவரை கலாய்த்த KPY பாலா.. | COOK WITH COMALI

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி, தர்ஷன், ஸ்ருத்திகா, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் களம் இறங்கி உள்ளார்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.மேலும் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாகினால் போட்டி சூடு பிடிக்க தொடங்கி விடும்.தற்போது கடந்த வாரம் போட்டியாளர்களுக்கு அரை இறுதி சுற்று போட்டி நடைபெற்றுள்ளது

ஒரு பக்கம் நிகழ்ச்சி விரைவில் முடிய உள்ளது என்று சோகம் ரசிகர்களிடம் கிளம்பியுள்ள நிலையில் இந்த முறை வெல்ல போவது யார் என்ற ஆர்வமும் அதிகமாக உள்ளது.ஸ்ருத்திகா இறுதி போட்டிக்கு முன்னேறிய நிலையில் தற்போது இந்த அரையிறுதி போட்டியில் அம்மு அபிராமி, தர்ஷன், வித்யூலேகா,முத்துக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சமைத்துள்ளனர்.கடந்த வார போட்டியில் இருந்து முத்துக்குமார் வெளியேறினார்.மேலும் கடந்த வாரம் செஃப் வெங்கடேஷ் பட் க்கு பதிலாக புதிய நடுவர் கலந்துகொண்டுள்ளார்.பார்ப்பதற்கே சீரியஸ் ஆக இருக்கும் இவரை கண்டு கோமாளிகள்,குக்குகள் அஞ்சியுள்ளனர்.இந்நிலையில் பாலா BEARD OIL விளம்பரத்துல வருகிற மாரி பிரம்மாண்டமாக இருக்கீங்க சார் என கூறி அவரை கலாய்த்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

https://youtu.be/b5pLEyLUnFQ?t=96

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in