The Indian Times

நீங்கள் தான் கோமாளிகள்..நாங்கள் COOK-கள் என போட்டியாளர்களை கலாய்த்த மணிமேகலை | COOK WITH COMALI

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி, தர்ஷன், ஸ்ருத்திகா, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் களம் இறங்கி உள்ளார்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.மேலும் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாகினால் போட்டி சூடு பிடிக்க தொடங்கி விடும்.தற்போது கடந்த வாரம் போட்டியாளர்களுக்கு அரை இறுதி சுற்று போட்டி நடைபெற்றுள்ளது.இந்த போட்டியில் தர்ஷன்,வித்யூலேகா மற்றும் அம்மு,ஸ்ருதிக்கா ஆகியோர் இறுதி போட்டிக்கு சென்றனர்

இந்நிலையில் முதலில் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களுக்கு தற்போது வைல்ட் கார்ட் போட்டி நடத்தப்பட்டுள்ளது.இந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது.இதில் மணிமேகலை சின்னக்கவுண்டர் கெட்டப்பில் வந்து போட்டியாளர்களை பார்த்து நீங்கள் நேற்றைய கோமாளிகள்,நாங்கள் நாளைய குக்குகள் என கூறி பங்கமாக கலாய்த்துள்ளார்.இந்த ப்ரோமோ மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.தற்போது இந்த வார நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பினை இந்த ப்ரோமோ அதிகரித்துள்ளது

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in