The Indian Times

நாளை நடைபெற இருந்த CSK vs RR Match ஒத்திவைப்பு! ஐ.பி.எல் ரத்து செய்யப்படுமா?

ஐ.பி.எல் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. சென்ற வருடம் உலகமே கொரோனா நோயை எதிரித்து போராடி கொண்டிருந்த நிலையில் கொரோன பாதிப்பின் காரணமாக தாமதமாக தான் ஐ.பி.எல் 2020 நடைபெற்றது. இதை தொடர்ந்து இந்த ஆண்டின் ஐ.பி.எல் தொடர் ரசிகர்கள் யாருக்கும் அனுமதியில்லாமல் பல கட்டுப்பாடுகளுடன் நடந்து வந்தது. இந்நிலையில் ஐ.பி.எல் players களும் இந்த முறை கொரோனாவால் பாதிக்கபட்டு வருவதால்.

Advertisement

தற்போது நடக்க இருந்த போட்டிகள் ஒத்தி வைக்க பட்டு வருகிறது. இந்த வரிசையில் நாளை நடக்க இருந்த சென்னை ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே ஆன போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் chief executive officer காசி விஸ்வநாதன், bowling coach எல்.பாலாஜி , மற்றும் பஸ் கிளீனருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த சென்னை , மும்பை போட்டியில் பாலாஜி சென்னை அணி வீரர்களோடு டகௌட்டில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதனால் நாளை நடக்க இருந்த சென்னை ராஜஸ்தான் போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நேற்று கொல்கத்தா , பெங்களூரு அணிக்கு இடையே ஆனா போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது சென்னை மேட்ச் தள்ளி போனது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல், இந்த வருடம் ஐ.பி.எல் நடைபெறுமா? என்ற சந்தேகம் பெரும்பாலும் எழுந்துள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Categories IPL