கேப்டன் மார்கனுடன் அஸ்வினுக்கு ஏற்பட்ட சண்டை! ஓடி வந்து தடுத்த தினேஷ் கார்த்திக்

Watch the video below ஐ.பி.எல் போட்டிகளின் இரண்டாம் பாகம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில இருக்கிறது. இரண்டாவது இடத்தில் டெல்லி அணி இருக்கிறது. இந்நிலையில் இன்று டெல்லி காப்பிடல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய டெல்லி அணி நல்ல துவக்கத்தை கொடுத்தாலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. இதில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ரிஷப் பந்த் மட்டுமே அதிகபட்ச ரன்களாக 39 ரன்களை அடித்தனர்.

கேப்டன் மார்கனுடன் அஸ்வினுக்கு ஏற்பட்ட சண்டை! ஓடி வந்து தடுத்த தினேஷ் கார்த்திக் 1

விளம்பரம்

20 ஒவேரில் டெல்லி அணி 127 ரன்களை மட்டுமே அடித்தது. அதன் பிறகு களம் இறங்கிய கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை தோற்கடித்தது. இந்நிலையில் முதலில் டெல்லி அணி விளையாடியபோது அஸ்வின் பேட்டிங் ஆட வந்தார். அப்போது டிம் சௌதீ ஒவேரில் கேட்ச் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது டிம் சௌதீ உடனும் கேப்டன் மார்கனுடனும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் மார்கனிடம் சண்டை போடுவது போல் அஸ்வின் அவரை நெருங்க , தினேஷ் கார்த்திகே அவர்களை விலக்கி விட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. Watch the video below

https://twitter.com/pant_fc/status/1442824141313175554?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1442824141313175554%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.behindwoods.com%2Fnews-shots-tamil-news%2Fsports%2Fashwin-involves-heated-exchange-with-tim-southee-and-eoin-morgan.html

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Categories IPL

Leave a Comment