The Indian Times

Lockdown நேரத்தில் வீட்டில் சமையல் செய்த சின்ன தல ரெய்னா!

ஒரு காலத்தில் இந்திய அணியின் தவிர்க்க முடியாத ஆல் ரௌண்டராக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. இவர் இந்திய அணிக்கு மிக சிறந்த பக்க பலம் என்றே கூறலாம். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரெய்னா தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த வருட ஐ.பி.எல் தொடரிலும் காலத்தில் இறங்கி தன்னுடைய சிறப்பை வெளிக்காட்டினார் ரெய்னா.

Advertisement

ஆனால் கொரோனா பரவளின் காரணமாக இந்த வருட ஐ.பி.எல் தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ஐ.பி.எல் 2021ன் மீதி உள்ள போட்டிகள் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று கூரப்படுகிறது. இந்நிலையில் தற்போது லாக்டவுன் காரணத்தினால் அணைத்து வீரர்களும் வீட்டிலிருக்கின்றனர். இதை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

Advertisement

அவ்வப்போது சில வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட தன்னுடைய பயோபிக்கில் சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என்று குறிப்பிட்ட செய்தி வைரலாக பரவியது. இந்நிலையில் தற்போது லக்டௌன் சமயத்தில் வீட்டில் சமையல் செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

https://www.youtube.com/watch?v=nM-2mwOnOXg

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Categories IPL