The Indian Times

நல்ல உப்புமா படத்தை கிண்டி கொடுத்துட்டாரு வெங்கட் பிரபு – கஸ்டடி BLUESATTAI மாறன் REVIEW

கோலிவுட்டில் முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு.இவரின் படத்திற்கு மட்டுமில்லாமல் இவருக்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.பிரபல இயக்குனர் கங்கை அமரன் மூத்த மகன் இவர் ஆவார்.இது பலருக்கும் தெரிந்ததே.பல படங்களை இயக்கி இருந்தாலும் அஜித்தை வைத்து இவர் இயக்கிய மங்காத்தா படம் பெரும் வரவேற்பினை பெற்று இவரை முன்னணி இயக்குனராக மாற்றியது. இப்படத்தினை தொடர்ந்து பல வெற்றிப்படங்களை சினிமாவுக்கு கொடுக்க தொடங்கிவிட்டார் வெங்கட் பிரபு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அண்மையில் நடிகர் சிம்புவை வைத்து இவர் இயக்கிய மாநாடு படம் சூப்பர் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் நாகசைதன்யாவை வைத்து புதிய படத்தினை இயக்கி வருகிறார்.இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளார்கள்.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தில் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கிறார்.மேலும் இப்படத்தில் சரத்குமார் ,அரவிந் சாமி,ப்ரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisement

இப்படம் நேற்று வெளியாகியுள்ளது,இப்படத்தினை விமர்சனம் செய்து BLUESATTAI மாறன் வீடியோ வெளியிட்டுள்ளார்,இதில் வெங்கட் பிரபு இந்த படத்துக்காக கொஞ்சம் கூட யோசிக்கலை,தெலுங்கு தயாரிப்பாளர்களை காலி பண்ணிட்டாரு,படம் நல்லாவே இல்லை,தேவையில்லாத கதையெல்லாம் உள்ள எடுத்துருக்காரு,நல்ல உப்புமா படத்தை கிண்டி கொடுத்துட்டாரு வெங்கட் பிரபு,அவர் படத்துல கதை இருக்கோ இல்லையோ பிரேம்ஜி இருப்பாரு ,இந்த படத்துலயும் இருக்காரு மொத்தத்துல இப்படம் தலைவலி தான் என கூறி விமர்சனம் செய்துள்ளார்.

Embed video credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in