The Indian Times

HIP HOP ஆதி மிரட்டும் வீரன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியது

தமிழ் சினிமாவில் ஹிப் ஹாப் பாடகராக அறிமுகமாகி தற்போது நடிகராகவும்,இயக்குனராகவும் உயர்ந்துள்ளவர் ஆதி.இவரது இசைக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது .தனது நிஜ வாழ்கை கதையை எழுதி இயக்கி நடித்து இவர் முதல் முதலில் அறிமுகமாகிய படம் மீசையை முறுக்கு.இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

முதல் படத்திலையே நடிகராகவும் இயக்குனராகவும் சாதித்து விட்டார் ஆதி.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து பிசியாக நடிக்க தொடங்கிவிட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

Embed video credits : saregama

அதன்படி தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.அண்மையில் இவர் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகிய அன்பறிவு படம் இவருக்கு பெரும் தோல்வி படமாக அமைந்துள்ளது.இப்படம் திரையில் இறங்கி இருந்தால் இவர் ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் செல்லும் அளவிற்கு மோசமாக அமைந்தது.

இதற்கு பின்னர் தற்போது ஆதி கதைகளை கேட்டு ஆராய்ந்து அதில் நடித்து வருகிறாராம்.அதன்படி தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

மரகதநாணயம் பட இயக்குனர் ஆர்க் சரவணன் இயக்கத்தில் வீரன் படத்தில் நடித்து வருகிறார்.சத்திய ஜோதி நிறுவனம் ஆனது இப்படத்தினை தயாரித்துள்ளது.படத்திற்கு இசையும் ஹிப் ஹாப் ஆதியே இசையமைக்கிறார்.

இதனால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இப்படத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ளார் ஆதி.தமிழ் சினிமாவில் உருவாகிய முதல் சூப்பர் ஹீரோ இவர் தான்,இப்படத்தின் முதல் பாடலான தண்டர்காரன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது,

Advertisement

இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடலான பப்பரமிட்டா எனும் பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு,இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.வீரன் ஜூன் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in