The Indian Times

மறைந்த நடிகர் மனோபாலா மாடித்தோட்டம் வைத்து விவசாயம் செய்த புகைப்படங்கள் இதோ

இயக்குனர் மற்றும் நடிகர் என சினிமாவை கலக்கியவர் மனோபாலா.இயக்குனராக சினிமாவில் களம் இறங்கி நகைச்சுவை நடிகராக அனைவரின் மனதினையும் கவர்ந்தார்.

இவரின் நகைச்சுவைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.1982 ஆம் ஆண்டு ஆகாயகங்கை என்ற படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.

Advertisement

தமிழில் இவர் 20க்கும் அதிகமான படங்களை இயக்கியுள்ளார்,அதில் ஒரு சில படங்கள் மாபெரும் வெற்றியும் பெற்றுள்ளது.தற்போது சினிமாவில் முழுநேரம் நகைச்சுவை நடிகராக பலரையும் சிரிக்க வைத்து வருகிறார்.

பல முன்னனி கதாநாயகர்களுடனும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துவிட்டார்.1994 ஆம் ஆண்டு தாய்மாமன் படத்தில் நடித்து சினிமாவில் தனது முகத்தினை முதல் முறையாக காமித்தார் மனோபாலா.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி , இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது சமையல் திறமையை காண்பித்தார்.இந்த நிகழ்ச்சி மூலம் பலரையும் தனது ரசிகர்கள் ஆக்கினார் மனோபாலா.

இறுதி போட்டி வரை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாதியிலேயே எலிமினேட் ஆகி வெளியே சென்று அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தார்.பல நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் இன்றுவரை தனது நகைச்சுவையால் அசத்தி மக்களை சிரிக்க வைப்பதில் தனி திறமை கொண்டவர் இவர்

தற்போது இவர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். இந்த செய்தி ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இவர் வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வந்தார்,அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in