The Indian Times

புகழை தூக்கி துண்டு போல மேல் துடைத்த காளையன்… COOK WITH COMALI

தமிழில் மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்து நான்காவது சீசனில் களம் இறங்கி அதிலும் கலக்கி வருகிறது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த நான்காவது சீசனுக்கு கடந்த மூன்று சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை ,குரேஷி ,புகழ் ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க செய்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ,மைம் கோபி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.கடந்த வாரம் முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்து வருகிறது.

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது, ப்ரோமோவில் புகழ் காளையனிடம் வம்பு இழுக்கவே புகழை தூக்கி சுத்தியுள்ளார்,புகழ் விழுந்துவிடுவாரோ என்ற அச்சத்தில் போட்டியாளர்கள் அவரை பிடிக்க சென்றுள்ளனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.என்னங்க துணி துவைக்குற மாதிரி துவைக்குறீங்க என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in