The Indian Times

வயிறு குலுங்க சிரிக்க வைக்க வரும் celebration ரவுண்டு! குக்கு வித் கோமாளி ப்ரோமோ

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் வைக்கும் அளவிற்கு இருக்கும் அஸ்வின் ஷிவாங்கி யின் காதல் , செட்டில் ஒரு பெண்ணை விடாமல் அனைவரையும் டாவடிக்கும் புகழின் குறும்புத்தனம் , பாலாவின் கோர்வையான கிண்டல் வார்த்தைகள் பார்ப்பவர்களை கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைக்கும்.

Advertisement

சென்ற வாரம் குக்கு வித் கோமாளியில் வைல்ட் கார்டு ரவுண்டு நடைபெற்றது. அதில் இதுவரை எலிமினேட் ஆகி சென்ற அனைவரும் கலந்து கொண்டனர். அதில் ஷகீல் மற்றும் பவித்ரா ஆகியோர் 4வது மற்றும் 5வது பைனலிஸ்ட் ஆகா தேர்வு செய்யப்பட்டனர்.தற்போது இந்த வார குக்கு வித் கோமாளி யின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வாரம் பைனல்ஸ நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் செலப்ரேஷன் ரவுண்டு நடைபெற போவதாக ப்ரோமோ வெளியாகி உள்ளது. தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in