The Indian Times

தளபதி 65 பூஜை ! HD Photos இதோ

தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள். ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார்.

 

வெறும் 50 சதவீத இருக்கையில் ரிலீஸ் ஆகி இருந்தாலும் படம் மிக பெரிய வசூலை குவித்தது.இந்நிலையில் அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்.

Advertisement

இந்த படத்தை கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார்.தற்போது இன்று பெருங்குடியில் உள்ள சன் தொலைக்காட்சி ஸ்டுடியோவில் தளபதி 65 பூஜை நடைபெற்று வருகிறது.

Advertisement

அந்த பூஜை விழாவிற்கு தளபதி விஜய் ஸ்டைலாக சிமெண்ட் கலர் ஷர்ட் அணிந்து வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பிக் பாஸ் கவினும் இணைந்துள்ளார். அது மட்டுமின்றி மற்றொரு புதிய அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 2 ஆம் தேதிகளில் தளபதி 65 படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது என்றும், சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் படக்குழுவினர் ஐரோப்பாவிற்கு செல்லப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in