The Indian Times

அய்யயோ.. மண்டைல தீ விழுந்துட்டே..வெடி போட்டது தப்பா போச்சே… தல தீபாவளி கொண்டாடிய புகழ்

பல கனவுகளுடன் சென்னை வந்தவர்களில் ஒருவர் புகழ்.ஆரம்பத்தில் சென்னையில் கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என வெறியுடன் போராடி வந்தார்.அப்பொழுது தான் இவர் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் பலனாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய அது இது எது நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது..இதனை பயன்படுத்தி விஜய்டிவியில் அடியெடுத்து வைத்தார் புகழ். இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்த வேண்டும் என தனது முழுத்திறமைகளையும் காண்பித்து புகழ் தனியாக அந்த நிகழ்ச்சியில் தெரிந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அவரை பலரும் கவனிக்க தொடங்கினர். கூட்டத்தில் ஒருவனாய் உள்நுழைந்த புகழ் பின்னர் தனது எதார்த்த நடிப்பு மற்றும் பேச்சுக்களால் மக்களை வெகுவாக கவர்ந்தார்.குறிப்பாக அவர் மட்டுமே தனியாக பேசக்கூடிய பெண் குரல் உண்டு அதை நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு பேசி அனைவரது மனதினையும் கொள்ளைகொண்டார் புகழ்.பெண் வேடம் மட்டுமே தொடர்ச்சியாக அணிந்ததால் பல இன்னல்களை அவரது வாழ்க்கையில் சந்தித்துள்ளார்.இவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பலனாய் அவருக்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது.அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து மிகவும் பிரபலமடைந்தார்.

Advertisement

தற்போது இவர் தனது மனைவி பென்சியுடன் தனது முதல் தல தீபாவளியை கொண்டாடியுள்ளார்.மேலும் பட்டாசு வைத்து மாஸாக நடந்து வரும் வேளையில்,பட்டாசு வெடித்து புகழ் மேல் விழ அங்கிருந்து ஓடியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது ரசிகர்கள் தங்களது தீபாவளி வாழ்த்துக்களை புகழுக்கு தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in