The Indian Times

விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் மாறுபட்ட நடிப்பில் இடம் பொருள் ஏவல் TRAILER இதோ…

நடிகர் விஜய் சேதுபதி பல சினிமா ரசிகர்களை கவர்ந்த கலைஞன்.இவரின் நடிப்பு என்ற கலைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு என நான்கு திசைகளிலும் நடிகனாக அசத்தி வரும் முன்னனி கலைஞன்.ஆரம்பத்தில் கூட்டத்தில் ஒருவனாய் வந்த விஜய் சேதுபதி இன்று அவரின் படத்தினை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் படம் நல்ல வரவேற்பினை பெற்று 66 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது,இப்படத்தினை தொடர்ந்து விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இன்று பலரின் மனதினையும் கவர்ந்துள்ளார். தற்போது கதாநாயகனாக இரக்கம் மட்டும் காட்டாமல் வில்லனாக மிரட்டியும் வருகிறார்.

Advertisement

தற்போது இவர் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்த இடம் பொருள் ஏவல் திரைப்படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியாகாமல் உள்ளது.இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால்,விஜய் சேதுபதி கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.கதாநாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நந்திதா ஸ்வேதா நடித்துள்ளார்.யுவன் இசையில் லிங்குசாமி இப்படத்தினை தயாரித்துள்ளார்.தற்போது இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளது படக்குழு ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed video credits : SONY MUSIC SOUTH

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in