படப்பிடிப்பில் முதல் முதலா இலை போட்டு சோறு போட்டதே விஜயகாந்த் தான்…

தமிழ் சினிமாவில் நடிக்க உடல் நிறம் தேவையில்லை என்பதை வெளிப்படுத்தியவர் விஜயகாந்த்.திறமை இருந்தால் போதும் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை தெரிவுபடுத்தியவர்.சினிமாவில் நடிக்க வேண்டும் என கனவை மட்டும் கொண்டு மதுரையில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடினார்,இவருக்கு 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் கதாநாயகனாக கலக்க தொடங்கினார்.இவருக்கு 1981 ஆம் ஆண்டு வெளியாகிய சட்டம் ஒரு இருட்டறை படம் பெரும் வரவேற்பினை சினிமாவில் பெற்றுக்கொடுத்து முன்னணி நடிகராக்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கிளாமர் காட்டும் நடிகை ஹன்சிகா

படப்பிடிப்பில் முதல் முதலா இலை போட்டு சோறு போட்டதே விஜயகாந்த் தான்... 1

விளம்பரம்

பல வெற்றிப்படங்களில் நடித்து பல தயாரிப்பாளர்களை வாழ வைத்துள்ளார்.இவரது படங்கள் நல்ல வசூலை பெறுவதால் இவரை வைத்து படம் இயக்க இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பலர் காத்துக்கொண்டிருந்தனர்.நடிப்பிற்காக நிறைய விருதுகளையும் பெற்றுள்ளார் விஜயகாந்த்,நடிகர் சங்க தலைவராக இருந்து தனது பணியினை சிறப்பாக செய்துவந்தார்.பின்னர் அங்கிருந்து அரசியலில் களம் இறங்கினார்.பல லட்சம் பேர் இவர் கட்சியில் உள்ளனர்.நிறைய நல்லதுகளை மட்டும் விஜயகாந்த் செய்து வந்துள்ளார்.அதனால் தான் மக்கள் இவரை கேப்டன் என செல்லமாக அழைத்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மகனுடன் Weekend கொண்டாடிய சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா புகைப்படங்கள்

படப்பிடிப்பில் முதல் முதலா இலை போட்டு சோறு போட்டதே விஜயகாந்த் தான்... 2

விளம்பரம்

விஜயகாந்த் பல மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல உதவிகளை செய்து வருகிறார்.தற்போது அவர் உடல்நலம் சரி இல்லாத பொழுதும் மக்களுக்கான உதவிகளை செய்து வருகிறார்.இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விஜயகாந்த் நண்பர் டி.சிவா கூறியதாவது,நான் சாப்பிடுறதை தான் எல்லாரும் சாப்பிட வேண்டும் என கூறியுள்ளார் மேலும் படப்பிடிப்பில் அனைவருக்கும் முதலில் இலை போட்டு சாப்பாடு அளித்தது விஜயகாந்த் தான் என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment