The Indian Times

விஜய் ஆண்டனி இயக்கி நடித்து மிரட்டும் பிச்சைக்காரன் 2 TRAILER இதோ

இசையமைப்பாளராக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்து பயணத்தினை தொடங்கியவர் விஜய் ஆண்டனி.இவர் 2005 ஆம் ஆண்டு சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெருமளவு ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை இறக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.இவரது இசைக்கெனெ பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஆரம்ப கட்டத்தில் இசை கருவிகளை வாங்குவதற்கு காசில்லாததால் பல இசைகளை வாயிலேயே இசைத்து அந்த பாடலும் பெருமளவு ஹிட் அடித்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இசை ஒருபக்கம் இருக்க நடிப்பினை கையிலெடுத்தார் விஜய் ஆண்டனி.இவர் 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கினார்.இப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் ஆண்டனி.பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார் விஜய் ஆண்டனி.தற்போது இவர் நடிப்பில் அக்னி சிறகுகள் ,கொலை என அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கிறது.மேலும் இவர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த பிச்சைக்காரன் படத்தினை இயக்கி நடித்து வருகிறார்.

Advertisement

தற்போது இப்படத்தின் முதல் நான்கு நிமிட காட்சிகளை ட்ரைலெராக வெளியிட்டுள்ளது படக்குழு. ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.புதிய கதையை விஜய் ஆண்டனி கையாண்டுள்ளதாக ரசிகர்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்,சினிமா வரலாற்றிலேயே கதாநாயகன் இல்லாமல் வில்லனை வைத்து ட்ரைலர் வெளியிட்ட முதல் பெருமை விஜய் ஆண்டனியை மட்டுமே சேரும்.மேலும் படம் இந்த கோடை விடுமுறைக்கு வருவதை அறிவித்துள்ளது படக்குழு.ரசிகர்கள் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Embed video credits : VIJAY ANTONY

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in