The Indian Times

PUMPKIN யாரு வேகமா ஆடுறானு பாப்போமா…போட்டி போட்டு நடனம் ஆடிய வித்யூலேகா மற்றும் பாலா

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,தர்ஷன்,ரோஷினி, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் களம் இறங்கி உள்ளார் .நாளுக்கு நாள் இறுதி போட்டி நெருங்கி வரும் நிலையில் போட்டியாளர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு மக்களிடம் கிளம்பியுள்ளது.மேலும் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாகினால் போட்டி சூடு பிடிக்க தொடங்கி விடும்.இந்த வார நிகழ்ச்சியில் செலிப்ரேஷன் சுற்று என்பதால் முந்தய சீசன்களில் உள்ள போட்டியாளர்களான ஷகீலா,ரித்திகா,தீபா,பவித்ரா ஆகியோ இந்நிகழ்ச்சியில் களம் இறங்கியுள்ளனர்

இந்த நிகழ்ச்சியில் இடைவெளிகளில் கோமாளிகள் போட்டியாளர்கள் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லை,இந்த சீசனில் வித்யுலேகாவுக்கும் பாலாவுக்கு மிக சரியாக பொருந்தியுள்ளது.இவர்கள் கூட்டணி காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது .இந்த வார நிகழ்ச்சி படப்பிடிப்பின் இடைவெளியில் பாலா மற்றும் வித்யூலேகா குத்தாட்டம் போட்டு நடனமாடியுள்ளனர்.இவர்களுடன் புகழும் இணைந்து மிரட்டல் நடனம் போட்டுள்ளனர்.இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in