The Indian Times

பந்தை எகிறி பிடித்த ஜடேஜா – நிம்மதியா ஒரு கேட்ச் புடிக்க விடுங்க டா

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்த இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. இந்திய அணிக்கு இது மிக மோசமான தோல்வியாக பார்க்கப்பட்டது. அதுமட்டுமின்றி பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இது பற்றி சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டுருந்தனர்.

இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி பாக்சிங் டே என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும இந்த போட்டியில் சமி காயம் காரணமாக ஆடவில்லை. கோலி விடுப்பு எடுத்துள்ளதால் ரஹானே கேப்டனாக களமிறங்குகிறார்.

தற்போது தொடரில் 0-1 என்ற கணக்கில் இந்திய அணி பின்தங்கி இருக்கும் நிலையில் பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தியுள்ளனர். இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில். டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. டாஸ் தோற்றது பின்னடைவாக இருந்தாலும் இந்திய அணி வெற்றி பெரும் என நம்பப்படுகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் அடித்த பந்தை பிடிக்க ஓடி வந்த ஜடேஜா மீது இன்னொரு இந்திய வீரர் வந்து மோதுகிறார் இந்த வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. Watch the video below

The video is embedded from cricket.com.au official youtube channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in