ஆறு கேட்சை விட்டதால் திணறும் இந்திய அணி – Ind Vs Aus
இந்தியா அணி சுற்றுப்பயணமாக ஆஸ்ட்ரேலியா சென்றுள்ள நிலையில் ஆஸ்ட்ரேலியா அணியுடன் ஒருநாள் தொடர் மற்றும் டி 20 போன்ற போட்டிகள் விளையாடியது. அதை தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியும் விளையாடி வருகிறது. இரண்டாம் நாளான இன்று ஆஸ்ட்ரேலியா அணி பேட்டிங் செய்து வருகிறது. அதில் ஆஸ்ட்ரேலியா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், இந்திய அணி எதிர்பாராத விதமாக பல கேட்ச்களை விட்டு ஆட்டத்தை சொதப்பல் ஆக்கி விளையாடினார்கள்.

பும்ரா ஓவர் போடுகையில் கிட்டத்தட்ட ஆறு கேட்ச்ஸ் வீதம் வந்த சூழலில் அதை கைப்பற்ற முடியாமல் விட்டது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி தற்போது ஒரு குழப்ப நிலையில் உள்ளது என்று பார்வையாளர்கள் தரப்பில் ஒரு சோகம் நிலவி வருகிறது. இருந்தபோதிலும் விராட் தலைமையிலான அணி நம்பிக்கையுடன் தங்களது முழு ஒத்துழைப்பை கொடுத்து வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in