The Indian Times

வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஷிக்கர் தவான்! வைரல் வீடியோ

ஐ.பி.எல் திருவிழா துவங்கி விட்டது. இதுவரை 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை போட்டியில் சென்னை அணியை வீழ்த்தியது டெல்லி அணி. இதை தொடர்ந்து தற்போது டெல்லி அணியின் ஷிக்கர் தவான் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. 5 வயதிலிருந்து 50 வயது வரை அனைவரையும் நடனமாட வைக்கும் குத்துப் பாடல் என்றால் அது மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் தான்.

Advertisement

இன்று வரை பல மக்களின் பிளே லிஸ்டில் இருக்கும் இந்த பாடல் அனிருத் இசையமைப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் வெளி வந்த மாஸ்டர் திரைப்படம் எரிதிர்பார்காத அளவுக்கு வசூலை குவித்தது.கொரோன பாதிப்பின் காரணத்தால் படம் வெளியாக ஒரு வருடம் தாமதமானாலும் இந்த பாடல் முன்னதாகவே வெளியாகி அனைவரையும் கவர்ந்திழுத்தது.

https://twitter.com/IamMonsterVJ/status/1381577450270810117

இது வரை தமிழ் சினிமாவில் எந்த பாடலும் இதனளவுக்கு ட்ரெண்ட் ஆனது கிடையாது. ஒரு வருடம் கடந்தும் இன்றும் பலர் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். தற்போது ஷிக்கர் தவான் இந்த பாடலுக்கு நடனமாடிய விஏஓ வைரலாகி வருகிறது.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in