The Indian Times

நான்கு கேட்ச்களை பிடித்து முடித்து கொண்டாடிய ஜடேஜா ! IPL 2021 CSK vs RR

2021 ஐ.பி.எல். தொடர் தொடங்கி விட்டது. கொரோனா பரவலின் காரணமாக ரசிகர்கள் யாரும் இல்லாமல் இந்த ஐ.பி.எல் நடைபெறுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியுள்ள இந்த தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது. இந்நிலையில் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய சென்னை அணி அற்புதமான துவக்கத்தை கொடுத்தனர். சென்னை அணியின் டுப்லெஸிஸ் 33 ரன்களும், மோயின் அலி 26 ரன்களும், ராயுடு 27 ரன்களும் என்று சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர் .

Advertisement

இறுதியாக சென்னை அணி 188 ரன்களை அடித்திருந்தது. 189 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது ராஜஸ்தான் அணி. அதில் துவக்க ஆட்டக்காரராக ஜாஸ் பட்லர் சிறப்பாக விளையாடி 49 ரன்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். அதன் பிறகு களம் இறங்கிய ஒவ்வொரு வீரர்களும் அடுத்தடுத்து த்தங்களது விக்கெட்களை பறிகொடுத்து சென்றனர். இறுதியாக சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்நிலையில் இந்த ஒரே மேட்சில் மட்டும் ஜடேஜா 4 காட்சிகளை பிடித்திருக்கிறார். 4 காட்சிகளை பிடித்தவுடன் அவர் மைதானத்தில் அதை கொண்டாடியது அனைவரையும் கவர்ந்துள்ளது. Watch the catches video below Which is Embed from Official IPLT20

Video Embed from Official IPLT20 Website | Credits – IPLT20 & BCCI

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in