தமிழை மறக்க மாட்டேன்.. முதல் படமே தமிழில் தயாரிக்கும் நம்ம தல தோனி… பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கிய படப்பிடிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி.ஒரு சிறந்த கேப்டன் ஆக இருந்து அணியை சிறப்பாக வழிநடத்தி இந்திய அணியை பல போட்டிகளில் ஜெயிக்க வைத்து பெருமை படுத்தியவர் இவர்.டி20 (2007) உலகக் கோப்பை , (2011) ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் (2013) சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று கோப்பைகளையும் வென்ற ஒரே கிரிக்கெட் கேப்டன் இவர் தான்.தோனி தலைமை வகித்த பொழுது தான் இந்திய அணி ஆனது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் என இரண்டிலும் ஒரே இடத்தினை பிடித்தது.தென் ஆப்ரிக்காவில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடக்க டி 20 உலகக்கோப்பையில் இளம் வயதில் வெற்றிக்கு அழைத்து சென்ற இவரது புகழ் இன்றுவரை கொடிகட்டி பறக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தாஜ்மஹால் பட நடிகையா இது... அடையாளமே தெரியல வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தமிழை மறக்க மாட்டேன்.. முதல் படமே தமிழில் தயாரிக்கும் நம்ம தல தோனி... பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கிய படப்பிடிப்பு 1

விளம்பரம்

தோனியின் தலைமையில் இந்திய அணி 72 டெஸ்ட் போட்டிகளில் சுமார் 41 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார் , 200ல் ODI போட்டிகளில் 110 ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ளார்,அதேபோல் 60 T20I ஆட்டங்களில் 27 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் தனது ஓய்வை அறிவித்தார்.இருப்பினும் ரசிகர்களுக்காக ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.இவருக்கென சென்னையில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.வருகிற ஐபிஎல் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் சென்னைக்காக கடுமையாக பயிற்சி செய்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  இளையராஜா BIOPIC-ல் நடிக்கும் தனுஷ் புதிய படத்தின் நிகழ்ச்சி

தமிழை மறக்க மாட்டேன்.. முதல் படமே தமிழில் தயாரிக்கும் நம்ம தல தோனி... பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கிய படப்பிடிப்பு 2

விளம்பரம்

தற்போது தோனி புதியதாக தோனி என்டேர்டைன்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துள்ளார்.இந்த தயாரிப்பு நிறுவனத்தில் முதலாவதாக தமிழ் படத்தினை தயாரிக்க உள்ளார் தோனி. LETS GET MARRIED என படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.இப்படத்தினை இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்க உள்ளார்,இப்படத்தில் கதாநாயகியாக ஹரிஷ் கல்யாணும் ,கதாநாயகியாக இவானா நடிக்க உள்ளார்கள் மேலும் இவர்களுடன் யோகி பாபு மற்றும் நதியா இணைந்து நடிக்க உள்ளனர்.சென்னையில் இப்படத்தின் பூஜையுடன் இன்று படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.தோனி மனைவி சாக்ஷி சிங் படத்தின் பெயரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  14 வருடம் கழித்து கேரளா வந்த தளபதி விஜய்க்கு ரசிகர்கள் வரவேற்பு

விளம்பரம்

Embed video credits : JAYA TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment