ஆசையாக புகைப்படம் எடுக்க வந்த ரசிகர்… செல்போனை தூக்கி எறிந்து அசிங்கப்படுத்திய நடிகர் ரன்பிர் கபூர்

தனக்கு பிடித்த கதாநாயகர்களை பார்த்தால் ரசிகர்கள் தங்களையே மறந்துவிடுகின்றனர்.அவர்களுடன் புகைப்படம் எடுக்க கடுமையாக முயற்சி செய்தும் வருகின்றனர்.இப்படி அவர்களை உயிராக நினைக்கும் ரசிகர்களை ஹீரோக்கள் பலரும் அவமான படுத்தி வருவது வாடிக்கையாகத்தான் உள்ளது.இது அனைத்து மொழி சினிமாக்களிலும் பொதுவாக நடைபெறும் ஒன்றாகும்,சில இடங்களில் கதாநாயகர்கள் பாதுகாப்பு கருதி இப்படி நடந்துகொண்டாலும் பல இடங்களில் அவர்களுடன் புகைப்படம் எடுக்க வாய்ப்பு கிடைத்தும் மறுத்துவிடுகின்றனர்.

ஆசையாக புகைப்படம் எடுக்க வந்த ரசிகர்... செல்போனை தூக்கி எறிந்து அசிங்கப்படுத்திய நடிகர் ரன்பிர் கபூர் 1

விளம்பரம்

தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்பிர் கபூர் செய்த செயல் ஒன்று ரசிகர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ரன்பிர் கபூருக்கு என்று ஹிந்தி சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய ஷாம்சீரா ,பிரம்மஸ்திரா போன்ற படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,இவருக்கு அடுத்ததாக அனிமல் படம் வெளியாக உள்ளது,இப்படத்திற்கு இவரது ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் ரசிகர் ஒருவர் ரன்பிர் கபூரிடம் புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளார்.

ஆசையாக புகைப்படம் எடுக்க வந்த ரசிகர்... செல்போனை தூக்கி எறிந்து அசிங்கப்படுத்திய நடிகர் ரன்பிர் கபூர் 2

விளம்பரம்

புகைப்படம் கொடுக்க ரன்பீரும் சம்மதித்துள்ளார்,இந்நிலையில் ரசிகரின் போன் சரியாக வேலை செய்யாததால் ஆத்திரமடைந்த ரன்பிர் அவரிடம் இருந்து செல்போனை வாங்கி தூரே எறிந்துள்ளார்,இதனால் ரசிகர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து ரன்பிர்கபூருக்கு கண்டனத்தினை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment