The Indian Times

ரஜினிகாந்தை பார்த்து துள்ளிக்குதித்த ரசிகை… அன்பாக நடந்துகொண்ட SUPERSTAR

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா,உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு தனது நடிப்பினால் மக்களை கவர்ந்துள்ளார் ரஜினி.பிறரை தட்டிக்கொடுத்து முன்னேற்றுவதில் இவரை போல சினிமாவில் யாரும் கிடையாது.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.

Advertisement

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது. ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை திருவிழா போல அண்மையில் கொண்டாடினர். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் படத்தில் கடுமையாக உழைத்து வருகிறார் ரஜினிகாந்த்.இப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Advertisement

தற்போது ரஜினிகாந்த் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.வீடியோவில் ரசிகை ஒருவர் ரஜினிகாந்தை பார்த்து வியந்து மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்துள்ளார்.அவரிடம் ரஜினிகாந்த் மிகவும் அன்பாக நடந்துகொண்டுள்ளார்.ரசிகர்களை கண்டு ஓடவும்,அவர்களின் செல்போன்களை தூக்கி எறியவும் செய்யும் நடிகர்கள் உள்ள காலகட்டத்தில் இவ்வளவு உயரத்தில் மிளிரும் சூப்பர் ஸ்டார் அன்பாக ரசிகர்களிடம் நடந்துகொள்வது ரசிகர்களிடம் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.ரஜினியின் இந்த செயலுக்கு அவரது ரசிகர்கள் பெருமளவில் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in