The Indian Times

வாரிசின் மொத்த வசூலை இரண்டே நாளில் தட்டி தூக்கிய ஷாருக்கானின் பதான்

பாலிவுட்டின் கிங் என செல்லமாக அழைக்கப்படுபவர் ஷாருக்கான்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.பல ஆண்டுகளாக தனக்கான இடத்தினை தக்க வைத்துக்கொண்டு பாலிவுட் பாட்ஷா வாக திகழ்கிறார்.எத்தனை நடிகர்கள் வந்தாலும் எத்தனை பான் இந்தியா படங்கள் வந்தாலும் இவரது மார்க்கெட்டினை தொட கூட முடியாது.அதுதான் இவரது பலமே.பல போராட்டங்களுக்கு பின்னர் இன்று ஷாருக்கான் பாலிவுட் கிங் ஆக மகுடம் சூட்டியுள்ளார்.

Advertisement

1992 ஆம் ஆண்டு தீவானா என்ற படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் களம் இறங்கினார்.இப்படத்தினை தொடர்ந்து ஹிந்தியில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உருவெடுத்தார்.தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் பாண் இந்தியா படமாக வெளியாக உள்ளது.ஷாருக்கானுக்கு ஹிந்தியில் மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளதால் இப்படத்தினை பாண் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு

Advertisement

இவருக்கு தற்போது இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் படம் குடியரசுதினத்தை முன்னிட்டு கடந்த புதன்கிழமை வெளியாகியுள்ளது.இதில் கதாநாயகியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார்.இப்படம் தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகி உள்ளது.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,வெளியாகிய முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 100கோடியை வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது தற்போது இரண்டு நாட்களில் இப்படம் சுமார் 235 கோடி வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,அதே சமயம் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய வாரிசு படம் 11 நாட்களில் மொத்தம் 250 கோடியை மட்டுமே வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.தற்போதும் தமிழ் சினிமா பாலிவுட் சினிமாவை மிஞ்ச முடியாமல்தான் போராடி வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in