The Indian Times

YES SIR..ROLEX SIR…நேரில் சந்தித்த DILLI மற்றும் ROLEX

நடிகர் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் களம் இறங்கியவர்.முதல் படத்திலேயே கார்த்தியின் நடிப்புக்குமாபெரும் வரவேற்பு கிடைத்தது.அறிமுகமாகிய முதல் படத்திலேயே கிடைத்த பெரிய வரவேற்பு கார்த்தியை முன்னணி கதாநாயகனாக உயர்த்தியது.முதல் படத்தில் கிராமத்து ஆளாக வந்து மிரட்டிய கார்த்திக்கு அடுத்த படம் லிங்குசாமி இயக்கத்தில் பையா படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் மார்டன் ஆன சிட்டி பையனாக வந்து அசத்தி அனைவரையும் கவர்ந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பருத்திவீரன் படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி கழித்து மீண்டும் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கொம்பன் படத்தில் கிராமத்து ஆளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கார்த்தி நடிப்பில் வெளியாகிய கொம்பன் படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.தற்போது கொம்பன் வெற்றியை தொடர்ந்து அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக கார்த்தி முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்துள்ளார் .இப்படத்தில் கதாநாயகியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார்.இவர்களுடன் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.நடிகர் சூர்யா இப்படத்தினை தயாரித்துள்ளார்.

Advertisement

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா நேற்று மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் மேடையில் வந்து பேசிய சூர்யா கார்த்தி குறித்து பெருமிதம் கொண்டார்.என்னை விட சிறப்பாக நடிப்பது கார்த்திதான் ,அவர் தான் எப்பொழுதும் சினிமாவை பற்றி நினைத்துக்கொண்டே இருப்பார் என கூறினார்.பின்னர் ரசிகர்கள் ரோலெக்ஸ் என சத்தம் போடவே,ரோலெக்ஸ் டில்லியிடம் பேசுவது போல YES SIR..ROLEX SIR என்ற வசனத்தினை பேசி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது

Embed video credits : 2D ENTERTAINMENT

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in