The Indian Times

இந்த வயசுலயும் மரண குத்து போடும் நடிகை சிம்ரன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை சிம்ரன்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து சினிமாவை கலக்கியவர்.1997 ஆம் ஆண்டு இயக்குனர் சபாபதி இயக்கத்தில் வெளியாகிய வி ஐ பி படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஒன்ஸ்மோர் படத்தில் நடித்து அசத்தினார்.அஜித்க்குமாருக்கு இவர் ஜோடியாக நடித்த வாலி திரைப்படம் பெரும் வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்தது.இதன்மூலம் தொடர்ந்து தமிழ் படங்களை நடித்து முன்னணி நடிகையாக உருவாகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது வயது காரணத்தினால் கதாநாயகியாக சினிமாவில் நடிக்காமல் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.இவர் தமிழ் மொழி சினிமாவில் மட்டுமில்லாமல் மலையாளம்,தெலுங்கு மட்டும் ஹிந்தி சினிமாக்களிலும் நடித்து அசத்தி இருக்கிறார்.திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி வரும் சிம்ரன் நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.அண்மையில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக மஹான் படத்தில் நடித்து அசத்தினார்.இப்படம் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.

Advertisement

தற்போது படங்களில் தொடர்ந்து நடிக்காமல் கிடைக்கும் படங்களில் மட்டும் கதைகளை கேட்டு நடித்து வருகிறார்.இவர் சிறப்பாக நடனம் ஆடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆல்தோட்ட பூபதி நானடா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சிம்ரனை இந்த வயசிலும் எப்படி இவரால் இப்படி இருக்க முடிகிறது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in