The Indian Times

தடுக்கி விழுந்த அபியை தாங்கி பிடித்த வெற்றி.. பிரிந்தவர்களுக்கு இடையே மீண்டும் START ஆகிய LOVE MOOD

விஜய் தொலைக்காட்சியில் நாடகத்தினை காண்பதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,இந்த ரசிகர்களுக்காக புது புது நாடகங்களை களம் இறக்கி வருகிறது விஜய் தொலைக்காட்சி.

அப்படி இதில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற சீரியல்களில் வரிசையில் உள்ளது தான் இந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.

இதில் வினோத் பாபு மற்றும் பவித்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.முதல் சீசன் முடிவடைந்து தற்போது இரண்டாவது சீசன் தொடங்குகிறது.முதல் சீசன் முடிவில் அபி குழந்தையை அழித்ததாக கூறி வெற்றி கடும் கோபத்தில் அபியை விட்டு பிரிகிறார்

தற்போது துவங்கியுள்ள இரண்டாவது சீசனில் மாவட்ட ஆட்சியராக அபிக்கும் வெற்றிக்கும் இடையே பெரும் போர் நடந்து வருகிறது.இந்நிலையில் தனது மகள் என தெரியமலையே சுடர் மேல் அன்பு கொண்டு தினமும் அவரை சந்தித்து வருகிறார்.

Advertisement

சுடருக்கும் வெற்றி என்றால் பெரும் பிரியம் உள்ளது.இருவரும் தந்தை மகள் என தெரியமலையே அதிக அன்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில் அபியும் சுடரும் கார் விபத்தில் சிக்கி உள்ளனர்.இதில் சுடர் சில காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி ஆகியுள்ளார்.இந்த செய்தி கேட்டு வெற்றி துடித்து விடுகிறார்.

சுடரை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற பொழுதுதான் சுடர் அபியின் குழந்தை எனவும் மேலும் அது தனக்கு பிறக்கவில்லை என தெரிந்துகொள்கிறார்.மேலும் தான் பிள்ளை இல்லை என்றாலும் சுடர் தன்னை மாற்றினார் என்பதற்காக கோவிலில் கடுமையாக பிரார்த்தனை செய்து சுடர் குணமாக வேண்டுகிறார் வெற்றி.

பின்னர் சுடருக்கு பாதுகாவலனாக வெற்றி அபி வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.ஆரம்பத்தில் மறுத்த அபி இறுதியாக ஒப்புக்கொண்டார்,இதனால் வெற்றி மீண்டும் அபி வீட்டில் சுடருக்கு பாதுகாவலனாக இருக்கிறார்.சுடரை பாத்திரமாகவும் பார்த்துக்கொள்கிறார் வெற்றி.

Advertisement

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் வெற்றி பழைய நியாபகத்தில் அபியிடம் காபி கேட்கவே அபியும் அதே நியாபகத்தில் கொண்டு வருகிறேன் என கூறுகிறார்.இறுதியாக அபி வெற்றியை பிரிந்ததை நினைவில் கொண்டு வருகிறார்

அதே சமயம் வெற்றி பாத்ரூமில் இருக்கும் பொழுது அங்கு தெரியாமல் வரும் அபி தடுக்கி விழும் பொழுது அவரை தாங்கி பிடித்து விடுகிறார்.மேலும் சுடருக்கு அபி ஊட்டி விடும் பொழுது பழசை நினைத்து பார்க்கிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in