நானும் அமுதவனானும் LOVE பன்றோம்னு நீங்க பார்த்திங்களா… ஸ்ருத்திகாவை கிழித்தெடுத்த ஜனனி… KPY CHAMPIONS
விஜய் டிவிக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல பல புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி மக்களை மகிழ்விப்பதில் ஒருநாளும் தவறியதே இல்லை விஜய் தொலைக்காட்சி எனலாம்.பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளினால் தான் விஜய் தொலைக்காட்சி இயங்கி வருகிறது என்று கூறினால் மிகையாகாது.

இந்த தொலைக்காட்சியில் அறிமுகமாகியவர்கள் தான் தற்போது வெள்ளித்திரையினை கலக்கி வருகிறார்கள்,அந்தளவிற்கு தன்னை நம்பி வந்தவர்களை உயர்த்தி விடுகிறது விஜய் தொலைக்காட்சி.
Embed video credits : VIJAY TELEVISION
மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி திறமைகளையும் ஊக்குவிக்கின்றது.தற்போது விஜய் டிவி KPY சாம்பியன்ஸ் என்ற காமெடி நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி வருகிறது.இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்நிகழ்ச்சி ஒளிபரப்படுகிறது.

இதுவரை விஜய் தொலைக்காட்சியில் வந்து பிரபலமடைந்த கலைஞர்கள் தங்களது நகைச்சுவை திறமையை இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிக்கொண்டு வந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் ஜனனி வருகை தந்துள்ளார்.

நிகழ்ச்சியில் சிம்பு போலவே பேசியும் அசத்தியுள்ளார்.ரசிகர்கள் ஜனனியின் திறமையை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.அதுமட்டுமில்லாமல் கடந்த வாரம் அமுதவாணன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்த பொழுது ஸ்ருத்திகா அவரிடம் நீங்க ஜனனியை காதலிக்கிறீங்களா என கேட்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சியை பார்த்த ஜனனி இந்த வாரம் சிம்பு குரலில் பேசும் பொழுது,போன வாரம் அமுதவாணன் வந்த பொழுது ஸ்ருத்திகா நீங்க ஜனனியை லவ் பண்ணுறீங்களா என கேட்டுள்ளார்,இது எதுக்கு தேவையில்லாத வேலை,வந்தோமா காசு வாங்குனோமா போனமான்னு இருக்கனும் என திட்டியுள்ளார்.

உடனே ஸ்ருத்திகா எழுந்து நின்று ஜனனியை பார்த்து கையெடுத்து கும்பிட்டுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
1 Comment
Sri — 24/4/2023
Jannani super surithika also super. Very interesting wow Sarigamapa