The Indian Times

அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியது கேங்க்ஸ்டா வீடியோ பாடல்

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம்.அந்த அளவிற்கு அஜித்குமார் மீது இவரது ரசிகர்கள் அளவுகடந்த அன்பு மற்றும் பாசத்தினையும் வைத்துள்ளனர்.இதற்கு முழுக்க காரணம் அஜித்,ஏனென்றால்,முதலில் உன் குடும்பத்தினை பார்த்துக்கொள் அடுத்து வந்து என் படத்தினை பார் என்று ரசிகர்களுக்கு அவர் அன்பாக கூறும் அறிவுரையே அஜித் பின்னால் இத்தகைய கூட்டத்தினை கூட்டியுள்ளது.

Advertisement

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் குடும்பத்தினரும் இப்படத்தினை பெரிதளவு கொண்டாடினர்.வலிமை படத்தின் வெற்றிக்குப்பிறகு அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் நடித்துள்ளார்.இப்படமும் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது அஜித் அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி படத்தில் நடிக்க உள்ளார்.

Advertisement

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.இன்று மே 1 அஜித் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.ரசிகர் மன்றத்தினை கலைத்தும் இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்றல் அது தல அஜித்திற்கு மட்டும் தான்.தற்போது அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியாகிய துணிவு படத்தில் இடம்பெற்ற கேங்ஸ்டா பாடல் வீடியோவையோ வெளியிட்டுள்ளது படக்குழு.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed video credits : ZEE MUSIC SOUTH

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in