The Indian Times

முரட்டுத்தனமாக மாறிய நடிகர் சூர்யா புகைப்படங்கள் வெளியாகியது.. கங்குவா படத்தில் காத்திருக்கும் சம்பவம்

நடிகர் சிவகுமாரின் மகன்தான் சூர்யா.அப்பாவின் மூலம் சினிமாவுக்குள் எளிதாக வந்தாலும் தனது கடின உழைப்பை இன்று வரை அவர் விட்டதே இல்லை என்றுதான் கூற வேண்டும்.அந்தளவிற்கு பல படங்களில் உடலை வருத்தி மெனக்கெடல்களை எடுத்துள்ளார் சூர்யா.இவர் பல படங்களில் நடித்தாலும் இவருக்கு சினிமாவில் திருப்பு முனையை ஏற்படுத்திய படம் என்று கூறினால் அது இயக்குனர் பாலா இயக்கிய நந்தா தான் இப்படத்திற்கு பிறகு தான் இவரின் திறமை உலகிற்கு தெரிந்து இவருக்கான ரசிகர்கள் கூட்டம் உருவாகியது. 

Advertisement

தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் 10 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் 3டியில் இப்படம் வெளியாக உள்ளது.தேவி ஸ்ரீபிரசாத் இசையில்,ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க உள்ளது.மிகப்பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது.இதனால் படம் எப்படி இருக்கும் என காண இப்படத்திற்கு இவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Advertisement

இப்படத்திற்கு கங்குவா என பெயரிடப்பட்டுள்ளது.இப்படம் உலகம் முழுவதும் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இப்படத்தில் ராஜா கால கதைகளுக்கு ஏற்ப உடல் எடை வேண்டும் என்பதால் நடிகர் சூர்யா அதிக உடல் எடை போட்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்,இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் உண்மையிலேயே இது சூர்யா தானா என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in