The Indian Times

கோலாகலமாக தொடங்கிய YOUTUBER இர்பானின் திருமண நிகழ்ச்சி புகைப்படங்கள் இதோ

உணவு என்றாலே நமது நியாபகத்திற்கு வருவது இர்பான் தான்,அந்தளவு தனது வீடியோக்களில் வகை வகையாக உணவு சாப்பிட்டு இன்று தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்து இருக்கிறார் இர்பான்.

ஐடி வேலையை தூக்கி எரிந்து நம்பிக்கையோடு யூடியூபில் களம் இறங்கி வெற்றியும் கண்டுள்ள இவர் பலருக்கும் முன் உதாரணம்,இவரை போல கஷ்டப்பட்டால் வாழ்க்கையில் ஜெயித்து விடலாம் என உணர்வே நமக்குள் வருகிறது.

Advertisement

ரசிகர்களுக்காக வெளிநாடு வரை சென்று அங்குள்ள உணவுகளையும் ருசித்து மக்களுக்கு எப்படி இருக்கிறது என கூறுவார் ,மேலும் வெளிநாடு மட்டும் இல்லாமல் தமிழகத்தில் இவர் கால் படாதா கடைகளே தற்போது இல்லை எனலாம்.

அந்தளவிற்கு உணவு பிரியராக உருமாறியுள்ளார் இர்பான் மேலும் இவர் சாப்பிடாத விலங்குகள் குறைவு தான்,பல உயிரினங்களையும் ருசித்து பார்த்தவர் இவர்.

ஆரம்பத்தில் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் பெண் உடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் அவரது திருமணம் நின்று போய் விட்டது ,

இந்நிலையில் இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு திருமணத்திற்கு சம்மதித்தும் உள்ளார்,தற்போது இவருக்கு திருமணம் நடக்க உள்ளது.இவரது திருமணத்திற்கு பல நடிகர்களையும் வரவேற்று இருக்கிறார் இர்பான்.

திருமணத்திற்கு முன்பு நடைபெறும் ஹால்தி நிகழ்ச்சி தற்போது நடைபெற்றுள்ளது.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது,ரசிகர்கள் வீடியோவை ஆவலாக பார்த்து வருகின்றனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in