The Indian Times

செம்ம MODERN ஆக மாறிய பூங்குழலியின் புகைப்படங்கள் இதோ

மலையாள சினிமாவில் துணை நடிகையாக வாழ்க்கையை தொடங்கியவர் ஐஸ்வர்யா லட்சுமி.2017ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியாகிய மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் நடிகையாக அறிமுகம் ஆகினார்.

இப்படத்தினை தொடர்ந்து பல படங்களிலும் ஒப்பந்தமாகி மலையாளத்தில் நடித்தார்.இருப்பினும் இவருக்கு எந்த படமும் எதிர்பார்த்த வெற்றியையோ பெயரையோ கொடுக்கவில்லை.இந்நிலையில் தமிழில் விஷால் நடிப்பில் வெளியாகிய ஆக்சன் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.அதனை பயன்படுத்திக்கொண்டு தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

Advertisement

தமிழ் சினிமாவில் இரண்டாவது படமே தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் அமைந்தது.இப்படத்தில் தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த படத்தின் மூலம் தமிழிலும் முன்னணி நடிகையாக உருவெடுத்தார் ஐஸ்வர்யா லட்சுமி.அண்மையில் இவர் பூங்குழலியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து அனைவரையும் மிரட்டி எடுத்திருந்தார்.

இப்படத்தினை தொடர்ந்து இவருக்கு வெளியாகிய கட்டா குஸ்தி படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் ஐஸ்வர்யா லக்ஷ்மி.

இவருக்கு அடுத்ததாக இயக்குனர் நிர்மல் சஹாதேவ் இயக்கத்தில் குமாரி படம் உருவாகியுள்ளது.இப்படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிகர் பிரிதிவிராஜ் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

தற்போது இவர் மாடர்ன் உடையில் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யாவா இது அடையாளமே தெரியல என கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in