The Indian Times

பொன்னியின் செல்வன் MAKING புகைப்படங்கள் வெளியாகியது…

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இயக்குனர்கள் இயக்க முயன்ற திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.சோழர்களின் வரலாறை பறைசாற்றும் கல்கி எழுதிய நாவல் தான் இந்த பொன்னியின் செல்வன்.

நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு இப்படத்தினை பெரும் பொருட்செலவில் இயக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்தினம்.தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய காவியத்தினை கொடுத்து பெருமை படுத்தியுள்ளார் என்று தான் கூற வேண்டும்.இப்படத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

Advertisement

உலகம் முழுவதும் பல மக்களால் அதிகம் வரவேற்க்கப்பட்டது.தமிழரின் பெருமையை உலகம் முழுவதும் இப்படம் கொண்டு சென்றுள்ளது என்றே கூறலாம்.இப்படத்தினை மணிரத்தினத்தின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ஆன மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

படத்தில் கார்த்தி,விக்ரம்,ஜெயம்ரவி ,பிரபு,ஜெயராம்,ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இரண்டாம் பாகத்திற்கான ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

இப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகியுள்ளது.இப்படத்தினை ரசிகர்கள் ஆவலாக கண்டு வருகின்றனர்.

படம் வெளியாகிய சில நாட்களிலேயே 300 கோடியை வசூல் செய்துள்ளது,தற்போது இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in