The Indian Times

மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய GP.முத்து

தமிழகத்தில் தற்போது ஜிபி முத்துவை தெரியாதவர்கள் யாரும் இல்லை அந்தளவிற்கு மக்களிடம் பிரபலமாகிவிட்டார் .டிக் டாக்கில் நகைச்சுவையாக வீடியோ பதிவிட்டு வந்தவர் ஜிபி முத்து, நாளடைவில் தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கவர்ந்து பெரும் வரவேற்பினை பெற்றார் ஜிபி முத்து.

தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். பம்பர் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Advertisement

இந்நிலையில் ஜிபி முத்துவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரியவாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டார் .இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்ட பிறகு இவருக்கு வரவேற்பு மக்களிடம் இரட்டிப்பாகியது.

இவரை டைட்டில் வின்னராக்க மக்களும் முடிவு செய்துவிட்டனர். மேலும் நூறு நாட்கள் ஜிபி முத்து நம்மளை மகிழ்விப்பார் என ஆவலாக இருந்தனர்.ஆனால் ஜிபி முத்து குடும்பத்தினை பிரிந்து இருக்க முடியாது என வெளியே கிளம்பிவிட்டார்

மேலும் பம்பர் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்,இப்படம் அடுத்தமாதம் திரைக்கு வர இருக்கிறது.

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு கலக்கி வருகிறார் ஜிபி,இவர் அண்மையில் தனது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

ரசிகர்கள் ஜிபி முத்துவின் மகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in