The Indian Times

PET வாத்தியாராக களம் இறங்கிய HIP HOP ஆதி… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

தமிழ் சினிமாவில் ஹிப் ஹாப் பாடகராக அறிமுகமாகி தற்போது நடிகராகவும்,இயக்குனராகவும் உயர்ந்துள்ளவர் ஆதி.இவரது இசைக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது .தனது நிஜ வாழ்கை கதையை எழுதி இயக்கி நடித்து இவர் முதல் முதலில் அறிமுகமாகிய படம் மீசையை முறுக்கு.இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.முதல் படகிலேயே நடிகராகவும் இயக்குனராகவும் சாதித்து விட்டார் ஆதி.வைரலாகும் ஆதி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.அண்மையில் இவர் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகிய அன்பறிவு படம் இவருக்கு பெரும் தோல்வி படமாக அமைந்துள்ளது.இப்படம் திரையில் இறங்கி இருந்தால் இவர் ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் செல்லும் அளவிற்கு மோசமாக அமைந்தது.இதற்கு பின்னர் தற்போது ஆதி கதைகளை கேட்டு ஆராய்ந்து அதில் நடித்து வருகிறாராம்.அதன்படி தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Advertisement

ஹிப் ஹாப் ஆதியின் 7வது படத்தினை நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தினை இயக்கிய கார்த்தி வேணுகோபால் இயக்க உள்ளார். இப்படத்தினை வேல்ஸ் தயாரிப்பு நிறுவன ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.ஹிப் ஹாப் தமிழாவே இப்படத்திற்கு இசையும் அமைக்க உள்ளார் என்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இன்று சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Embed video credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in