The Indian Times

மனைவி ஷாலினி பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய அஜித்

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.தற்போது அஜித் மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில்,போனிகபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிசியாக நடைபெற்று வருகிறது.

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.தனது குடும்பத்துடன் தல அஜித் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் நடிகர் அஜித் நேற்று சென்னையில் மனைவி ஷாலினி அஜித் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த பார்ட்டியில் நடிகர் அர்ஜுன் கலந்துகொண்டுள்ளார்.மங்காத்தா படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த அஜித் மற்றும் அர்ஜுன் என இவர்கள் புகைப்படம் தான் இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது.புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் மனைவிக்காக பிறந்தநாள் பார்ட்டி ஏற்பாடு செய்த அஜித்தை பாராட்டியும் ஷாலினிக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in