90ஸ் கிட்ஸ்களின் FAVOURITE POWER RANGER TOMMY OLIVER காலமானார்

90ஸ் கிட்ஸ்கள் பலருக்கும் விருப்பமான டிவி தொடர் எது என்றால் அனைவரும் தற்போது வரை கூறுவது பவர் ரேஞ்சர் என்று தான்.இன்று வரை இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்த அளவிற்கு சிறுவர்களை அதிகம் ஈர்த்துள்ளது இந்த பவர் ரேஞ்சர். ஜெட்டிக்ஸ் டிவியில் நிஞ்ஜா ஸ்டார்ம்,டைனோ தண்டர்,வைல்ட் போர்ஸ் என பல பவர் ரேஞ்சர்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது.இது அனைத்துமே ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் ஆர்ஜே பாலாஜியின் குடும்ப புகைப்படங்கள் இதோ

90ஸ் கிட்ஸ்களின் FAVOURITE POWER RANGER TOMMY OLIVER காலமானார் 1

விளம்பரம்

இதில் சிகப்பு கலர் ரேஞ்சர் தான் அனைவருக்கும் அதிகம் பிடிக்கும்,ஆனால் அதையும் தாண்டி பிடிக்கும் ரேஞ்சர் என்றால் ப்ளாக் ரேஞ்சர் டாமி ஆலிவர் தான்.இவர் டைனோ தண்டர் பவர் ரேஞ்சரில் பிளாக் ரேஞ்சர் ஆக வருவார்,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த தொடர் முழுவதுமே இவரை மையமாக வைத்து தான் நகரும்,இந்த பவர் ரேஞ்சரில் மட்டும் இல்லாமல் எல்லா பவர் ரேஞ்சர் தொடரிலும் சில முக்கிய கதாபாத்திரத்தில் வருவார்.

கட்டாயம் படிக்கவும்  படப்பிடிப்பில் குந்தவையின் குறும்புகள்... வெளியாகிய புகைப்படங்கள் இதோ

90ஸ் கிட்ஸ்களின் FAVOURITE POWER RANGER TOMMY OLIVER காலமானார் 2

விளம்பரம்

இவரது இயற்பெயர் ஜேசன் டேவிட் பிராங்க்.இவருக்கு வயது 49 ஆகும்.தற்போது இவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தினையும் அளித்துள்ளது.அனைவரும் தங்களை சிறுவயதில் மகிழ்வித்ததற்கு நன்றி என கூறி அவருக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment