The Indian Times

நிகழ்ச்சியில் வீணை வாசித்து அசத்திய பிகில் பாண்டியம்மா… உங்க திறமைக்கு நீங்க சினிமாவுல கண்டிப்பா பெரியாளா வருவீங்க

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர்.தனது எதார்த்தமான நகைச்சுவையினால் பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் இவர்.ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் சிறு சிறு வேடங்களில் தோன்றி மக்களை சிரிக்க வைத்து வந்தார்.பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்,மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இவரை போலவே இவரது மகள் இந்திரஜா சங்கரையும் சினிமாவில் களம் இறக்கி உள்ளார். இந்திரஜா பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படதில் நடித்து இந்திரஜா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றுள்ளார். இப்படங்களை தொடர்ந்து பல தமிழ் படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார் இந்திரஜா

Advertisement

தற்போது இவர் நிகழ்ச்சி ஒன்றில் வீணை வாசித்து அசத்தியுள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.13 ஆண்டுகளாக இசை பயின்று வந்து தற்போது அரங்கேற்றியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.இந்திரஜா திறமையை ரசிகர்கள் பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in